"வேலை வாங்கித் தருவதாக 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பேராசிரியரை கைது செய்ய வேண்டும்", மாணவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

கோவை : சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்து பணத்தைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை : சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்து பணத்தைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.



கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் சென்னை அமிர்தா கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார்.



இவர் கல்லூரியில் படிக்கும் போது, அதே கல்லூரியில் பேராசிரியராக இருந்த ரமேஷ்பாபு என்பவர், ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் பணம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கு படித்த 30 மாணவர்களிடம் இருந்து 2 மற்றும் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளதாக தெரிகிறது.

ஆனால், மாணவர்கள் படிப்பை முடித்த பிறகும் கூட ரமேஷ்பாபு வேலை வாங்கி தரவில்லை என குற்றம் சாடுகின்றனர் பாதிக்கபட்ட மாணவர்கள்.

பணம் கொடுத்த மாணவர்கள் தொடர்ந்து ரமேஷ்பாபுவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர், ஆனால் ரமேஷ்பாபு போலியான வேலையில் சேரும் கடிதம் கொடுத்து மாணவர்களை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, அவர் தலைமறைவாகிவிட்டார்.



இதைத் தொடர்ந்து ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் ரமேஷ்பாபுவை கைது செய்து பணத்தைப் பெற்றுத் தருமாறு மாணவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...